முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய் சேதுபதியின் 'யாதும் ஊரே யாவரும் கேளீர் பட கதை திருட்டு சர்ச்சை - ஆதாரத்துடன் நிரூபித்த எழுத்தாளர்

விஜய் சேதுபதியின் 'யாதும் ஊரே யாவரும் கேளீர் பட கதை திருட்டு சர்ச்சை - ஆதாரத்துடன் நிரூபித்த எழுத்தாளர்

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தின் கதை தனது படைப்புகளிலிருந்து திருடப்பட்டதாக எழுத்தாளர் தொ.பத்திநாதன் என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்'. ஈழத் தமிழர்களின் பிரச்னைகளை இந்தப் படம் பேசுபொருளாகக் கொண்டுள்ளது. மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெங்கட் கிருஷ்ணா ரோஹந்த் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி, மறைந்த நடிகர் விவேக், இயக்குநர் மோகன் ராஜா, கரு பழனியப்பன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துவரும் நிலையில், இந்தப் படத்தின் மீது கதை திருட்டு புகார் எழுந்துள்ளது. எழுத்தாளர் தொ.பத்திநாதன் என்பவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஈழ அகதிகளின் வாழ்வைக் கதைக்களமாக கொண்டுள்ள இந்தப் படம் கதையம்சம் எனது வரலாற்று நாவலான 'போரின் மறுபக்கம்', கட்டுரை நூலான 'தகிப்பின் வாழ்வு', 'அந்தரம்' நாவல், 'நாளையும் நாளையே' என்ற சிறுகதை ஆகியவற்றிலிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் பல கூறுகளை எடுத்துக்கொண்டுள்ளது.

தகிப்பின் வாழ்வு நூலில் சிம் கார்டு வாங்குவது தொடர்பான உரையாடலிலிருந்து கட்டுரை ஆரம்பமாகும். இந்த உரையாடல் கடையில் இருக்கும் பெண்ணுடனான உரையாடலாக இருக்கும். இது நேரடியாக படமாக்கப்பட்டுள்ளது. பெண் கதாப்பாத்திரத்தை ஆணாக மாற்றியிருக்கிறார்கள்.

இதையும் படிக்க |  பேருந்தில் இளைஞர் சுய இன்பம் - வீடியோ எடுத்து போலீஸில் ஒப்படைத்த நடிகை - அதிர்ச்சி சம்பவம்

2016 ஆம் ஆண்டு காலச்சுவடு இதழில் வந்த எனது 'நாளையும் நாளையே' சிறுகதையில் உதவிப்பணம் வழங்கும் அதிகாரி முன் குனிந்து கையெழுத்திடும் பெண்ணின் மார்பகங்களை அதிகாரி பார்ப்பதால் அந்தப் பெண் அதை சரி செய்ய முற்படுவாள். இதனால் கடுப்படையும் அதிகாரி அப்பெண்ணைக் கூடுதல் விசாரணைக்கு உட்படுத்துவார். இந்தக் காட்சி படத்தில் காவல் நிலையத்தில் மார்பகங்கள் தெரிய அகதிப் பெண்ணிடம் விசாரணை நடப்பதுபோல் படமாக்கப்பட்டுள்ளது.

அந்தரம் நாவலில் மகன் காணாமல்போவதால் தவிக்கும் தாயின் கதை இருக்கிறது. படத்தில் காணாமல்போன தம்பியை அக்கா தேடுவது போல் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

முகாமில் எட்டாண்டுகள் பதிவில்லாமல் இருந்துவிட்டு மறுபடியும் முகாமில் பதிவுபெற்றேன். இரண்டு பெயர்களில் தமிழ்நாட்டில் அகதிகள் முகாமிலும் முகாமிற்கு வெளியிலும் வாழ்ந்திருக்கிறேன். ஐந்து நட்சத்திர ஓட்டலில் அகதி என்பதை மறைத்து வேலை செய்தபின் உண்மையை நிர்வாகத்திடம் சொல்லிவிட்டு விலகியிருந்தேன். இதை எல்லாம் எனது தன்வரலாற்று நூலான போரின் மறுப்பக்கத்தில் எழுதப்பட்டுள்ளன. இதை மையமாகக் கொண்டு யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

top videos

    இதற்கான அனுமதியை என்னிடமோ அல்லது புத்தகங்களை வெளியிட்ட காலச்சுவடு நிறுவனத்திடமோ பெறவில்லை. ஆகவே இதுகுறித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: Actor Vijay Sethupathi