முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வாரிசு அரசியலால் இந்த இடத்துக்கு வந்தார் என்பது பொய் - முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து விஜய் சேதுபதி அதிரடி

வாரிசு அரசியலால் இந்த இடத்துக்கு வந்தார் என்பது பொய் - முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து விஜய் சேதுபதி அதிரடி

மு.க.ஸ்டாலின் - விஜய் சேதுபதி

மு.க.ஸ்டாலின் - விஜய் சேதுபதி

முன்னதாக மதுரை மத்திய சிறைச்சாலைக்கு சிறை நூலக திட்டத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி 1000 புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படக் கண்காட்சி சென்னையைத் தொடர்ந்து மதுரை மேனேந்தல் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தக் கண்காட்சியை அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் பார்வையிட்டுவருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், எனக்கு முதலமைச்சர் மேல் ஏற்கனவே மரியாதை உண்டு. கண்காட்சியை பார்த்த பின்னர், அவர் வாரிசு அரசியல் மூலம் தான் இந்த இடத்திற்கு வந்தார் என்ற கூற்று பொய் என்று தோன்றுகிறது என்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்கள் அவரிடம் கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் படம் பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் உள்ளே அனுமதிக்காதது குறித்து கேட்டபோது, எங்கேயும் எப்போதும் இன்னொரு மனிதன் ஒடுக்கப்படுவதும் நசுக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பூமி அனைத்து மனிதர்களும் ஒன்றாக வாழ்வதற்கு படைக்கப்பட்டுள்ளது. அதில் வேற்றுமையை யார் எந்த வகையில் செய்தாலும் ஏற்க முடியாது என்று பேசினார்.

முன்னதாக மதுரை மத்திய சிறைச்சாலைக்கு சிறை நூலக திட்டத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி 1000 புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார். மேலும் உசிலம்பட்டி பகுதியில் சினிமா ஷுட்டிங்கில் இருப்பதால் முதல் கட்டமாக 1000 புத்தகங்கள் வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

top videos
    First published:

    Tags: Actor Vijay Sethupathi, CM MK Stalin