முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தளபதி விஜய் - லோகேஷின் லியோ படத்தில் இணையும் விஜய் சேதுபதி ? ஆனால் இப்படி ஒரு ட்விஸ்டா?

தளபதி விஜய் - லோகேஷின் லியோ படத்தில் இணையும் விஜய் சேதுபதி ? ஆனால் இப்படி ஒரு ட்விஸ்டா?

விஜய் - விஜய் சேதுபதி

விஜய் - விஜய் சேதுபதி

தளபதி விஜய்யின் லியோ படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக தகவல் பரவிவருகின்றன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துவரும் படம் லியோ. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படம் தொடர்பாக வெளியான ஸ்டில்ஸ்களில் லாங் ஹேர், சால்ட் அண்ட் பெப்பர் என முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இருக்கிறார் நடிகர் விஜய். இந்தப் படம் வருகிற அக்டோபர் 19-ம் தேதி வெளியாகவிருக்கிறது. வெளியீட்டுக்கு குறைவான காலமே இருப்பதால் படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் 90 நாட்களில் முடித்து படத்தொகுப்பு உள்ளிட்ட இறுதி கட்ட பணிகளை மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்தப் படம் லோகேஷின் எல்சியூவில் வருகிறதா அல்லது முற்றிலும் தனிப்படமாக உருவாகிறதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. சமீபத்தில் வெளியான லியோ பட பூஜை வீடியோவில் நடிகர் மரியம் ஜார்ஜ் இடம்பெற்றிருந்தார். இவர் கைதி படத்தில் நெப்போலியன் என்ற போலீஸ் கான்ஸ்டபிளாக கலக்கியிருப்பார்.

இதையும் படிக்க | ரஜினிகாந்துக்கு வில்லனாகும் விக்ரம்? 'தலைவர் 170' படம் குறித்த மாஸ் தகவல்

அதே போல விக்ரம் படத்தல் ஏஜென்ட் டீனாவாக கலக்கிய வசந்தி சமீபத்தில் காஷ்மீர் சென்றுள்ள படக்குழுவில் இடம்பிடித்திருந்தார். தளபதி 67ல் 'கைதி' நெப்போலியனும் 'விக்ரம்' ஏஜென்ட் டீனாவும் இடம்பிடித்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கூடுதல் தகவலாக இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ட்விஸ்ட் என்னவென்றால் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்றும் வில்லனாக நடிக்கும் சஞ்சய் தத்துக்கு குரல் கொடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. லோகேஷின் மாஸ்டர், விக்ரம் படங்களில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actor Thalapathy Vijay