முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய் பிறந்தநாளுக்கு மாற்றம் வரும்... 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டி... - விஜய் நற்பணி மன்ற நிர்வாகி தகவல்

விஜய் பிறந்தநாளுக்கு மாற்றம் வரும்... 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டி... - விஜய் நற்பணி மன்ற நிர்வாகி தகவல்

 விஜய்

விஜய்

2025 சட்டமன்றத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட வாய்ப்பு உள்ளது என மக்கள் இயக்க மாணவரணி செயலாளர் ஆனந்த் திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

திருவாரூர் அருகே ஒட்டநாச்சியார்குடி என்ற பகுதியில் உள்ள தனியார் திருமண அரங்கில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மக்கள் இயக்க வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட மாணவர் அணி தலைமை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட விஜய் நற்பணி மன்ற பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் ஜூன் மாதம் 22-ம் தேதி விஜய் பிறந்தநாள் அன்று ரத்ததான முகாம், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், விவசாய பயன்பாட்டிற்கு உரிய கருவிகள் வழங்கப்படும் எனவும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இதையும் படிக்க |  ''ஆமா நீ கூப்பிட்டு வச்சு பண்ண வேலைக்கு...'' - லோகேஷை கலாய்த்த விஜய் - தரமான சம்பவம்

அப்போது செய்தியாளர்களை சந்தித்த விஜய் இயக்க மாணவர் அணி மாவட்டச் செயலாளர் ஆனந்த் கூறுகையில், ''பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றவரை ஒவ்வொரு தொகுதி வாரியாக கணக்கெடுத்து சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு அழைத்து சென்று பரிசு சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும், விஜய் பிறந்தநாளுக்கு பின்பு நல்ல ஒரு மாற்றம் வரும். தொண்டர்கள் ஆசைப்படுவது போல் முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் அடுத்த மாதம் சென்னையில் பெரிய அளவில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கூட்டம் நடைபெறும் என சொல்லப்படுகிறது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் தொகுதி வாரியாக அரசியல் நிலவரம் குறித்து கணக்கெடுக்க வேண்டும் என கூறி இருக்கிறார்கள். அதனை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

top videos

    இந்த மாத இறுதிக்குள் அனுப்ப சொல்லி இருக்கிறார்கள். அடுத்த 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் யார் வேட்பாளராக நிற்க வேண்டும் என விருப்பப்படுபவர்கள் பெயரை கூறுங்கள். மற்றதை விஜய் முடிவெடுப்பார் என விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என விஜய் ரசிகர் மன்ற மாணவர் அணி தலைவர் ஆனந்த் தெரிவித்தார்

    First published:

    Tags: Actor Thalapathy Vijay