முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய் போட்ட உத்தரவு - திருச்சியில் திரண்ட விஜய் மக்கள் இயக்கத்தினர்

விஜய் போட்ட உத்தரவு - திருச்சியில் திரண்ட விஜய் மக்கள் இயக்கத்தினர்

விஜய் மக்கள் இயக்கம்

விஜய் மக்கள் இயக்கம்

திருச்சியில் பேரரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348வது சதய விழாவை முன்னிட்டு அரசர் சிலைக்கு அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு இடங்களில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அத்துடன் கடந்த உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட்டு சில இடங்களில் அந்த மக்கள் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் வெற்றியடைந்தனர்.

அரசியலுக்கு வருவதற்கு முன்னோட்டமாக சில சமூக நடவடிக்கைகளில் நடிகர் விஜய் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது. அதன்படி கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என நடிகர் விஜய் அறிவுறுத்தினார். அவரது உத்தரவை ஏற்று தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையும் படிக்க |  குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி வாழ்க்கையில் நடந்த சோகம் - ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

இந்த நிலையில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348வது சதய விழாவை முன்னிட்டு அரசர் சிலைக்கு அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என விஜய் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் திருச்சியில் பேரரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348வது சதய விழாவை முன்னிட்டு அரசர் சிலைக்கு அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், கரூர், புதுக்கோட்டை, மதுரை, பெரம்பலூர், திண்டுக்கல், மயிலாடுதுறை மாவட்ட தலைவர்கள், அணித்தலைவர்கள் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

First published:

Tags: Actor Thalapathy Vijay