விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம் மே 19ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.
இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய விஜய் ஆண்டனி, இயக்குனர் சசி இயக்கத்தில் பிச்சைக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்தார். 2016ஆம் ஆண்டு வெளியான அந்த திரைப்படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றியடைந்தது.
தமிழகத்தை தாண்டி ஆந்திரா - தெலுங்கானா மாநிலங்களிலும் அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. குறிப்பாக 50 லட்சத்திற்கு விற்கப்பட்ட தெலுங்கு டப்பிங் உரிமை, 20 கோடி ரூபாய் வசூல் செய்தது.
இந்த நிலையில் பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க விஜய் ஆண்டனி திட்டமிட்டார். அதற்காக சில இயக்குனர்கள் இடமும் பேசினார். ஆனால் இறுதியில் நடிகர் விஜய் ஆண்டனியே பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
Also read... வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் பீட்டர் பால் மரணம்.. திடீர் மரணத்துக்கு இதுதான் காரணமா?
அந்த திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் இருந்து வேறுபட்டு இந்த திரைப்படத்தை அவர் எடுத்துள்ளார் என தெரிகிறது. இந்த திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்ததால், படத்தின் சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தனர்.
இந்த நிலையில் மே 19ஆம் தேதி பிச்சைக்காரன் 2 திரைப்படம் வெளியாகிறது என அறிவித்துள்ளனர். இந்த திரைப்படத்தை நடிகர் விஜய் ஆண்டனி இயக்கிய தயாரித்து இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay Antony