முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''கடலில் விபத்து.. முகத்தில் 8, 9 பிளேட்'' - விபத்து குறித்து பேசிய விஜய் ஆண்டனி!

''கடலில் விபத்து.. முகத்தில் 8, 9 பிளேட்'' - விபத்து குறித்து பேசிய விஜய் ஆண்டனி!

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து குறித்து நடிகர் விஜய் ஆண்டனி பேசியிருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி, தயாரித்து, நடித்து, இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்துக்கு அவர் படத்தொகுப்பையும் மேற்கொண்டிருக்கிறார். இந்தப் படம் வருகிற மே 19 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில் மலேசியாவில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கினார். அப்போது அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு குணமானாகி படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனக்கு ஏற்பட்ட விபத்து குறித்து பேசினார். அவர் பேசியதாவது, ''ஷுட்டிங்கிற்காக மலேசியா போயிருந்தேன். கடலில் போட்டில் நானும் ஹீரோயினும் இருக்கோம். இன்னொரு போட்ல இருந்து ஷுட் பண்றாங்க. அந்த போட்டை ஓட்டி சென்றால் கேமராவுக்கு நல்ல விஷுவல் கிடைக்கும் என்பதால் அதனையொட்டி செல்கின்றனர்.

இதையும் படிக்க |  உலக சுற்றுப்பயணத்தை முடித்த அஜித்.. அடுத்த பிளான் இதுதான் - மேனேஜர் அறிவிப்பு

அப்போ அலை போட்டை தூக்குனதுல நான் மற்றொரு போட்டை தூக்கிட்டேன். அப்போ மூக்கில் அடைச்சு. முகத் தாடை கிழே போயிருச்சு. நினைவிழந்து உள்ளே போயிட்டேன்.

ஒருவேளை நினைவிருந்தால் கை காலை ஆட்டி தப்பிச்சிருக்க முடியும். நான் உள்ளே போய் மேலே வரேன். அசிஸ்டென்ட் கேமராமேன், ஹீரோயின் எல்லோரும் மேலே தூக்குனாங்க. கண்ணில் ஒரு பக்கம் ஸ்கிராட்ச் ஆயிருச்சு. சுத்தி எல்லோரும் பார்க்கிறாங்க. முதலில் எனக்கு புரியல.

top videos

    பிறகு கண்ணாடி பார்க்கும்போதுதான் எனக்கு என்ன ஆனது என்று புரிந்தது. இப்போ கூட முகத்தில் ஒரு பக்கம் லேசா உள்ள போயிருக்கும். பேசுறதுக்கு கூட அசௌகரியமா இருக்கு. முகத்தில் 8,9 பிளேட் வச்சிருக்காங்க. ஆனா மனசு ரொம்பா நல்லா இருக்கு'' என்று பேசியுள்ளார்.

    First published:

    Tags: Vijay Antony