முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 - தமிழ்நாட்டை விட தெலுங்கில் அதிக வசூல் - ஆச்சரியத் தகவல்

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 - தமிழ்நாட்டை விட தெலுங்கில் அதிக வசூல் - ஆச்சரியத் தகவல்

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

பிச்சைக்காரன்-2 திரைப்படம் தமிழகத்தை விட தெலுங்கு மாநிலங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்துள்ளது. 

  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் ஆண்டனி நடித்து, தயாரித்து, இயக்கி, இசையமைத்து, எடிட் செய்துள்ள பிச்சைக்காரன்-2 திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. பிச்சைக்காரன் திரைப்படத்தின் முதல் பாகம் இரண்டு மொழிகளிலும் பெரும் வெற்றி அடைந்திருந்தது.

குறிப்பாக இப்படத்தின் தெலுங்கு உரிமை ரூ. 50 லட்சத்திற்கு விற்கப்பட்டது. ஆனால் தெலுங்கு மாநிலங்களில் அந்த திரைப்படம் 20 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகியிருந்தது.  இதனால் பிச்சைக்காரன்-2 திரைப்படத்திற்கு தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளிலும் நல்ல எதிர்பார்ப்பு நிலவியது.

இதையும் படிக்க |  "லேட்டஸ்ட் பாசமலர் படம் தான் பிச்சைக்காரன்- 2" புதுச்சேரி ரசிகர்கள் விமர்சனம்!

அதற்கு ஏற்ற வகையில் ஏராளமான திரையரங்குகளில் இந்த திரைப்படத்தை வெளியிட்டனர். இந்த நிலையில் தமிழகத்தில் பிச்சைக்காரன்-2 திரைப்படம் முதல் நாளில் 2.72 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும், தெலுங்கு மாநிலங்களில் 2.82 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் முதல் நாளில் பிச்சைக்காரன்-2 திரைப்படம் மூன்று மாநிலங்களிலும் சேர்த்து முதல் நாளில் 7.75 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.

இதன் மூலம் விஜய் ஆண்டனி நடிப்பில் இதுவரை வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெயரை பிச்சைக்காரன்-2 பெற்றுள்ளது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைப்பதால் வரும் நாட்களில் இன்னும் அதிக வசூலை ஈட்டும் என கூறப்படுகிறது.

top videos
    First published:

    Tags: Vijay Antony