முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''வருது பிச்சைக்காரன் 3'' - ரசிகர்கள் முன் விஜய் ஆண்டனி அதிரடி

''வருது பிச்சைக்காரன் 3'' - ரசிகர்கள் முன் விஜய் ஆண்டனி அதிரடி

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

பிச்சைக்காரன் படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் உருவாகும் என நடிகரும் இயக்குநருமான விஜய் ஆண்டனி ரசிகர்கள் மத்தியில் அறிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் ஆண்டனி நடித்து இயக்கிய பிச்சைக்காரன் 2 திரைப்படம் இந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த திரைப்படம் முதல் நாளில் மட்டும் தமிழ்,  தெலுங்கு ஆகிய மொழிகளில் 7.75 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். இந்த நிலையில் நடிகரும், இயக்குநருமான விஜய் ஆண்டனி அம்பத்தூரில் உள்ள ராக்கி திரையரங்கில் ரசிகர்களுடன் படத்தின் வெற்றியை கொண்டாடினார்.

ரசிகர்களுடன் படம் பார்க்க வந்த விஜய் ஆண்டனிக்கு திரையரங்கில் இருந்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.  அதன்பிறகு திரையரங்கிற்குள் சென்ற விஜய் ஆண்டனி, ரசிகர்களுடன் பேசினார். இதன் பிறகு பிச்சைக்காரன்  முதல் பாகத்தில் இடம் பெற்ற அம்மா செண்டிமெண்ட் பாடலை ரசிகர்கள் முன் பாடினார்.

இதையும் படிக்க | பேருந்தில் இளைஞர் சுய இன்பம் - வீடியோ எடுத்து போலீஸில் ஒப்படைத்த நடிகை - அதிர்ச்சி சம்பவம்

பின்னர் பேசிய அவர் பிச்சைக்காரன் படத்தின் மூன்றாவது பாகம் வெளியாகும் என ரசிகர்கள் முன்பு அறிவித்தார். அத்துடன் இந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடும்விதமாக திரையரங்கில் பணிபுரியும் ஒரு பெண்ணை கேக் வெட்ட வைத்து உற்சாகப்படுத்தினர்.

ராக்கி திரையரங்கில் ரசிகர்களை சந்தித்த விஜய் ஆண்டனி அதன் பின்பு பாடியில் உள்ள சிவசக்தி திரையரங்கிலும் ரசிகர்களை சந்தித்து பேசி செல்ஃபி எடுத்துகொண்டார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

top videos
    First published:

    Tags: Vijay Antony