முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மணிரத்னம் - கமல்ஹாசன் இணையும் படம்.. ஹீரோயின் இவரா? சூடுபிடிக்கும் பேச்சுவார்த்தை

மணிரத்னம் - கமல்ஹாசன் இணையும் படம்.. ஹீரோயின் இவரா? சூடுபிடிக்கும் பேச்சுவார்த்தை

மணிரத்னம் - கமல்ஹாசன்

மணிரத்னம் - கமல்ஹாசன்

மணிரத்னம் - கமல்ஹாசன்  இணையவுள்ள புதிய படத்தின் ஹீரோயின் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகின்றன.  

  • Last Updated :
  • Tamil Nadu, India

தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்தவரும் கமல்ஹாசன் அடுத்ததாக எச்.வினோத் இயக்கும்  படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு இயக்குநர் மணிரத்னத்தின் புதிய திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.  இதற்கான அறிவிப்பு கடந்த 5 மாதங்களுக்கு முன்பே வெளியாகியிருந்தது. இந்தப் படத்திற்கான கதை எழுதும் பணியில் எழுத்தாளர் ஜெயமோகனும் மணிரத்னமும் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க |  ''எனக்கு கணவர் இல்லை. நான் சிங்கிள். '' - பீட்டர்பால் மரணம் குறித்து மனம் திறந்த வனிதா

இந்த நிலையில் இப்படத்தில் நடிக்க நடிகை வித்யா பாலனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  அவர் தற்போது வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் மும்பை திரும்பியதும் அது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இருந்தாலும் தற்போது முதற்கட்ட பேச்சுவார்த்தை அவரிடம் நடத்தப்பட்டிருக்கிறது.

வித்யா பாலன் இதற்கு முன் தமிழில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு வேறு எந்த தமிழ் திரைப்படங்களிலும் அவர் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actress Vidya Balan, Kamal Haasan, Mani ratnam