முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Viduthalai Part 1 Twitter Review: எப்படி இருக்கிறது வெற்றிமாறனின் விடுதலை?

Viduthalai Part 1 Twitter Review: எப்படி இருக்கிறது வெற்றிமாறனின் விடுதலை?

விடுதலை

விடுதலை

Viduthalai Part 1 Twitter Review - வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படம் குறித்து ட்விட்டரில் பல விமர்சனங்கள் வந்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விடுதலை. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர்  இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் பாகம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. 2 பாகங்களாக உருவாகியுள்ள இந்த படம் விசாரணை, அசுரன் போன்று மிகவும் அழுத்தமான திரைப்படமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்தப் படத்தில் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்த இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார். இந்நிலையில் இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் படம் பார்த்த பலரும் ட்விட்டரில் விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Soori, Actor Vijay Sethupathi, Director vetrimaran