முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'இளையராஜா சாருக்குத்தான் எல்லாப் புகழும்' - விடுதலை படம் குறித்து பேசிய நடிகை பவானி

'இளையராஜா சாருக்குத்தான் எல்லாப் புகழும்' - விடுதலை படம் குறித்து பேசிய நடிகை பவானி

பவானி ஸ்ரீ

பவானி ஸ்ரீ

இந்த படத்தில் சூரி ஜோடியாக நடித்திருப்பவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் சகோதரி பவானி ஸ்ரீ என்பது குறிப்பிடத்தக்கது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விடுதலை. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர்  இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் பாகம் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 2 பாகங்களாக உருவாகியுள்ள இந்த படம் விசாரணை, அசுரன் போன்று மிகவும் அழுத்தமான திரைப்படமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்தப் படத்தில் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார்.

இப்படம் வருகிற மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். விடுதலை படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் சூரி ஜோடியாக நடித்திருப்பவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் சகோதரி பவானி ஸ்ரீ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தான் ஒரு பழங்குடியின பெண்ணாக நடித்திருப்பதாகவும், இந்த படத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் மிகவும் அற்புதமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

படம் குறித்து பேசிய அவர், “ஒட்டுமொத்த படப்பிடிப்பே மறக்க முடியாதது. காடுகளின் இந்த சூழலுக்கு நான் புதியவள். அந்த சூழல் எனக்கு ஒரு தியான அனுபவத்தை கொடுத்தது. இது எனக்கு ஒரு நிதானமான மற்றும் இனிமையான அனுபவத்தை பரிசளித்து என்றுமே எனக்கு மறக்க முடியாததாக அமைந்தது" என்றார்

தனக்கான ரசிகர் பட்டாளம் அதிகரித்துள்ளது பற்றி நடிகை பவானி கூறும்போது, “இது உண்மையா என்பது எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் இரண்டு பாடல்களிலும் நான் இருக்கிறேன். இதற்கான பாராட்டுகளைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அற்புதமான பாடல்களால் படத்தை அழகுபடுத்தியிருக்கும் மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா சாருக்கு எல்லாப் புகழும் சேரும்” என்றார். இசை மேதைகளின் குடும்பத்தைச் சேர்ந்த பவானிக்கு 'விடுதலை'யில் ஒரு பாடலைப் பாட வேண்டும் என்ற ஆசை இருந்ததா? என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, அவர் புன்னகையுடன் மறுத்தார்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Director vetrimaran, Ilaiyaraja