முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய் மக்கள் இயக்கத்தின் மதிய உணவு திட்டம் - நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் - வைரலாகும் வீடியோ

விஜய் மக்கள் இயக்கத்தின் மதிய உணவு திட்டம் - நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் - வைரலாகும் வீடியோ

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வழங்கப்படும் மதிய உணவு

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வழங்கப்படும் மதிய உணவு

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வழங்கப்பட்ட மதிய உணவை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ‘தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ சார்பாக ஒருநாள் மதிய உணவு வழங்க உள்ளதாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி அன்று "உலக பட்டினி தினம்" அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் நீண்டகால பட்டினியால் வாடும் மக்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.

இதையும் படிக்க |  விஜய்யின் 'தளபதி 68' : ''சிங்கிள் டீ தானடா கேட்ட....'' - வெங்கட் பிரபுவை கலாய்க்கும் வீடியோ மீம்!

உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு பசி எனும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “தளபதி விஜய் மக்கள் இயக்கம்” சார்பாக ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் வருகின்ற 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை (மதிய) உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

அதற்கேற்ப இன்று சென்னையில் நீலாங்கரை பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 200 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவு வாங்கி சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இதனையடுத்து மக்கள் பசிப்போக்கும் விஜய் மக்கள் இயக்கம் என்ற ஹேஷ்டேக் பகிர்ந்து டிரெண்ட் செய்துவருகிறார்கள்.

First published:

Tags: Actor Thalapathy Vijay