முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Video: நானும் ரைடர் தான்... நேபாள ரசிகருக்கு அட்வைஸ் கொடுத்த அஜித் - வைரலாகும் வீடியோ

Video: நானும் ரைடர் தான்... நேபாள ரசிகருக்கு அட்வைஸ் கொடுத்த அஜித் - வைரலாகும் வீடியோ

அஜித் குமார்

அஜித் குமார்

நேபாளத்தில் ரசிகருடன் நடிகர் அஜித் குமார் உரையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

துணிவு படத்துக்கு பிறகு நடிகர் அஜித் லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஏகே 62 படத்தில் நடிக்கவிருக்கிறார். விக்னேஷ் சிவன் இந்தப் படத்திலிருந்து விலகிய நிலையில் மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டு அவர் விலகியது போல இந்த முறை நடந்துவிட கூடாது என தயாரிப்பு நிறுவனம் தெளிவாக இருக்கிறதாம். இதன் காரணமாக முழு கதையையும் கேட்டு ஓகே செய்யப்பட்ட பிறகே அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
 
View this post on Instagram

 

A post shared by News18 Tamil Nadu (@news18tamilnadu)இதையும் படிக்க |  Video: வெளியானது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 பட முக்கிய காட்சி

இந்த இடைவேளையில் நடிகர் அஜித் குமார் பைக்கில் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். இந்த நிலையில் தற்போது நேபாளத்தில்  ரசிகர் ஒருவர் தனது மொபைலில் வீடியோ எடுத்த படி நடிகர் அஜித்திடம் ''நானும் பைக் ரைடர்'' என்கிறார். அதற்கு அஜித் அந்த ரசிகரிடம், ''பாதுகாப்பாக வண்டி ஓட்டுங்கள்'' என்கிறார். மேலும் ''எங்கள் ஊர் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்'' என ரசிகர் கேட்க, ''நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்'' என்கிறார்.

top videos
    First published:

    Tags: Ajith