முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சுதந்திரம் கொடுத்தாங்க.. அம்மா கராச்சி.. அப்பா தமிழ் - தந்தை குறித்து அஜித்தின் தம்பி பேசிய வீடியோ வைரல்!

சுதந்திரம் கொடுத்தாங்க.. அம்மா கராச்சி.. அப்பா தமிழ் - தந்தை குறித்து அஜித்தின் தம்பி பேசிய வீடியோ வைரல்!

அஜித் குமாரின் அம்மா - அப்பா

அஜித் குமாரின் அம்மா - அப்பா

அப்பாவும் அம்மாவும் வேறு வேறு கலாச்சார பின்புலத்தைச் சார்ந்தவர்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அஜித் குமாரின் அப்பா பி.சுப்பிரமணியம் இன்று அதிகாலை 3.15 மணியளவில் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

நடிகர் விஜய் நேரில் சென்று அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். முன்னதாக அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அப்போது அவரது உடலைப் பார்த்து அஜித்தின் தாய் கதறி அழ, அவரைக் கட்டிப்பிடித்து நடிகர் அஜித் ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.

இந்த நிலையில் அஜித் குமாரின் சகோதரர் அனில் குமார் யூடியூப் சேனல் ஒன்றில் தனது அப்பா குறித்து பேசியது வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில், எங்கள் பெற்றோர்கள் எங்களை மிகுந்த கட்டுப்பாட்டுடன் வளர்க்கவில்லை. நிறைய சுதந்திரம் கொடுத்தாங்க. எங்க அப்பா ஒரு ரிபெல். படிப்பில் அவருக்கு பெரிய ஆர்வம் இல்லை. ஆனால் அவர் மிகுந்த புத்திசாலி. இண்டர்நெட்டை வெகு சுலபமாக கையாள்வார். அப்போ எனக்கு தோணுச்சு. இவரு டிகிரி வாங்கல. ஆனால் புத்திசாலினு தோணுச்சு.

அப்பாவும் அம்மாவும் வேறு வேறு கலாச்சார பின்புலத்தைச் சார்ந்தவர்கள். அப்பா தமிழ், கேரளாவில் வளர்ந்தார். அம்மா சிந்தி, கராச்சியைச் சேர்ந்தவர். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவுக்கு வந்துவிட்டார். நாங்கள் டீனேஜில் இருக்கும்போது ஸ்மோக் பண்ணும்னா, டிரிங்க் பண்ணனுமா எங்க முன்னாடி பண்ணுங்கனு எங்க வீட்ல சொல்லுவாங்க. வேற யாராவது உங்கள் பையன் இப்படி பண்றாங்கனு சொல்லும்போது அவங்களுக்கு கஷ்டமா இருக்கும் என்றார்.

First published:

Tags: Actor Ajith