முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / "அரசியலோ, வரலாற்று நேர்மையோ கொஞ்சமும் இல்லை..." - 'விடுதலை' திரைப்படத்தை கடுமையாக சாடிய பிரபல எழுத்தாளர்!

"அரசியலோ, வரலாற்று நேர்மையோ கொஞ்சமும் இல்லை..." - 'விடுதலை' திரைப்படத்தை கடுமையாக சாடிய பிரபல எழுத்தாளர்!

சூரி - வெற்றிமாறன்

சூரி - வெற்றிமாறன்

எழுத்தாளர் முருகவேள் தனது பேஸ்புக் பக்கத்தில் விடுதலை படம் சோளகர் தொட்டி நாவலில் இருந்தும் சிவ சுப்பிரமணியன் எழுதிய வீரப்பன் வாழ்ந்ததும் நூலில் எடுக்கப்பட்டு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி இணைந்து நடித்துள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பாக எல்ரெட் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் சூரிக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷ் குமாரின் தங்கை பவானி ஸ்ரீ நடித்துள்ளார். மேலும் பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

top videos

    இந்த நிலையில் எழுத்தாளர் முருகவேள் தனது பேஸ்புக் பக்கத்தில் விடுதலை படம் சோளகர் தொட்டி நாவலில் இருந்தும் சிவ சுப்பிரமணியன் எழுதிய வீரப்பன் வாழ்ந்ததும் நூலில் எடுக்கப்பட்டு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அதில், அபத்தமான அவியலமான படம். பழனி பஞ்சாமிர்தம், பாண்டியன் ஊறுகாய், மாங்காய் ஜுஸ், லெமன் சோடோ, நர்சுஸ் காபி எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கி, மிக்ஸியில் அடித்து செய்த கதை. அரசியலோ வரலாற்று நேர்மையோ கொஞ்சமும் இல்லை. என்று விமர்சனம் செய்துள்ளார்.

    First published:

    Tags: Actor Vijay Sethupathi, Director vetrimaran, Ilaiyaraja