முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''சினிமா துறைக்கு மொழி கிடையாது, கலைக்கு மொழி உண்டு'' - இயக்குநர் வெற்றிமாறன் அதிரடி

''சினிமா துறைக்கு மொழி கிடையாது, கலைக்கு மொழி உண்டு'' - இயக்குநர் வெற்றிமாறன் அதிரடி

வெற்றிமாறன்

வெற்றிமாறன்

சமீபத்திய நிகழ்வு ஒன்றில் சினிமா துறைக்கு மொழி கிடையாது, கலைக்கு மொழி உண்டு என இயக்குநர் பேசியிருப்பது வைரலாகிவருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், CII தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய திரைப்பட தொடர்பாக 2 நாள் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இதில் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மேம்பாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது, நம் கதையை, நம் மக்களுக்காக, நம் மொழியில் உணர்வுகளை பிரதிபலித்து படங்கள் எடுப்பதால் தான் நாம் இந்தளவுக்கு வெற்றிகளை பெற முடிந்துள்ளது. ஆஸ்கர் விருது பெறுவதற்கு படம் எடுப்பதற்கு பதில் நமது மொழியில், நமது உணர்வுகளை அவர்கள் புரிந்து கொள்வது தான் வெற்றி.

இதையும் படிக்க |  மீண்டும் இணையும் ஹிட் காம்போ ? நடிகர் விஜய்யின் தளபதி 68 பட வேற லெவல் தகவல்

சினிமா துறைக்கு மொழி கிடையாது. ஆனால் கலைக்கு மொழி உண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளில் மண் சார்ந்த படைப்புகள் அதிக அளவு வருவதால் அது எல்லைகளை கடந்து அனைத்து தரப்பினரையும் சென்று அடைகிறது.

தென்னிந்திய திரைப்படங்கள் எல்லை கடந்து அனைத்து தரப்பினரையும் சென்றடைந்துள்ளதால் வருவாயும் பெருகி உள்ளது. தனித்துவமான நம் மண் சார்ந்த கதைகளை செய்வதே வெற்றிக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

top videos
    First published:

    Tags: Director vetrimaran