முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிரபல நடிகர் சரத் பாபு கவலைக்கிடம்.. உடலில் என்ன பிரச்னை? வெளியான தகவல்!

பிரபல நடிகர் சரத் பாபு கவலைக்கிடம்.. உடலில் என்ன பிரச்னை? வெளியான தகவல்!

சரத் பாபு

சரத் பாபு

நடிகர் சரத் பாபு கவலைக்கிடமான நிலையில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழில் முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை போன்ற பல படங்களில் நடித்தவர் சரத்பாபு. ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என தனக்கு கிடைக்கும் கதாப்பாத்திரங்கள் அனைத்திலும் முத்திரை பதித்துள்ளார்.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இவர் நடித்த முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து படங்களின் மூலம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படிக்க | இஸ்லாம் நம்பிக்கைகளை கேள்விகேட்கும் படமா? வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா பட டீசர்

தமிழில் இவரது நடிப்பில் கடைசியாக வசந்த முல்லை என்ற படம் வெளியாகியிருந்தது. மேலும் சில சின்னத்திரை தொடர்களிலும் சரத் பாபு நடித்திருக்கிறார். 72 வயதாகும் சரத்பாபு கிட்டத்தட்ட 50 வருடங்களாக திரைப்படங்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் நடிகர் சரத் பாபு உடல் நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் நடிகர் சரத் பாபுவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது. நோய் தொற்று காரணமாக சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

top videos
    First published:

    Tags: Hospital