முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி!

பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி!

நடிகர் இன்னசென்ட்

நடிகர் இன்னசென்ட்

Actor innocent passed away | கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், நுரையீரல் பாதிப்பு மற்றும் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் இன்னசென்ட் உடல் நலக்குறைவால் காலமானார்.

மலையாளத்தில் 1972ம் ஆண்டு வெளியான ‘நிருதாசாலா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இன்னசென்ட், கடந்த 50 ஆண்டுகளாக 700-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் ‘லேசா லேசா’, ‘நான் அவளை சந்தித்தபோது’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். புற்றுநோய் பாதிப்புக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த வாரம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 10.30 மணிக்கு நடிகர் இன்னசென்ட் காலமானார்.

top videos

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், நுரையீரல் பாதிப்பு மற்றும் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நடிகர்கள் மம்மூட்டி, திலீப் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். இன்னசென்டின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Actor, Death