முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''விஜய்க்கு கொடுத்த வாக்குறுதி... சீக்ரெட் சந்திப்பு” - போட்டோ பகிர்ந்த வெங்கட் பிரபு

''விஜய்க்கு கொடுத்த வாக்குறுதி... சீக்ரெட் சந்திப்பு” - போட்டோ பகிர்ந்த வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு - விஜய்

வெங்கட் பிரபு - விஜய்

Thalapathy 68 Update : தளபதி 68 படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் விஜய்யுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தளபதி 68 படத்துக்காக விஜய் - வெங்கட் பிரபு இணையவிருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவிய நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவா? அல்லது அனிருத்தா? என்ற ரசிகர்களின் கேள்விக்கும் விடை கிடைத்திருக்கிறது. புதிய கீதை படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு விஜய் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணையவிருக்கின்றனர்.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 25வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் முன்னணி கலைஞர்கள் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் சர்வதேச தரத்தில் இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.




 




View this post on Instagram





 

A post shared by Venkat Prabhu (@venkat_prabhu)



இதையும் படிக்க |  சர்வதேச தரத்துடன் தயாராகும் விஜய் - வெங்கட் பிரபுவின் 'தளபதி 68' - படத்தின் ஹைலைட்ஸ் என்ன தெரியுமா?

இந்த நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யுடன் எடுக்கப்பட்ட படத்தைப் பகிர்ந்து, ''என் மேல் வைத்த நம்பிக்கைக்கு நன்றி விஜய் அண்ணா. உங்களிடம் வாக்கு கொடுத்ததற்கு ஏற்ப பட அறிவிப்புக்கு பிறகே இந்த போட்டோவை பகிர்கிறேன். (இந்த போட்டோ 10 மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்டது) கனவு நிஜமாகிறது. என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து 10 மாதங்களுக்கு முன்பே இந்தப் படம் முடிவு செய்யப்பட்டதா என ரசிகர்கள் ஆச்சரியம் தெரிவித்து வருகிறார்கள்.

top videos
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Venkat Prabhu