முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / “வழக்கம்போல இது வெற்றிமாறனின் 'விடுதலை'” - திருமாவளவன் சொன்ன ரிவ்யூ

“வழக்கம்போல இது வெற்றிமாறனின் 'விடுதலை'” - திருமாவளவன் சொன்ன ரிவ்யூ

தொல்.திருமாவளவன் -  விஜய் சேதுபதி - சூரி

தொல்.திருமாவளவன் - விஜய் சேதுபதி - சூரி

வெற்றி மாறன் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் பேராசிரியராகவும் வெளிப்படுகிறார் என திருமாவளவன் கருத்து.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. சூரி இந்தப் படத்தின் கதையின் நாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

மேலும் இந்தப் படத்தில் சூரிக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடித்துள்ள நிலையில், ராஜீவ் மேனன், கௌதம் மேனன், தமிழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இந்தப் படம் விமர்சகர்களின் பாராட்டுக்களை குவித்து வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுதலை குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், தோழர் வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் பார்த்தேன். அரசு -அதிகாரம் -ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்களை விவரிக்கிறது. அரசு என்றால் அதிகாரம்; அதிகாரம் என்றால் ஆயுதம்; ஆயுதம் என்றால் ஆணவம்; ஆணவம் என்றால் எளிய மக்களின் குருதியைச் சுவைக்கும் குரூரமான ஒடுக்குமுறை என்பதை அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்துகிறது.

மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயுதம் தாங்கிய குழு எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் எதிர்வினையாற்றுகிறது என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஆழமான உரையாடலுக்கு உட்படுத்துகிறது.

தோழர் வெற்றி மாறன் அவர்கள் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் பேராசிரியராகவும் வெளிப்படுகிறார். மக்களை அமைப்பாக்குவதும் அரசியல்படுத்துவதும் இன்றியமையாத ஒரு தேவை என்பதை உணர்த்துகிறார். வழக்கம் போல இது 'வெற்றிமாறன் படைப்பு' என முத்திரை பதித்துள்ளார். வெல்க விடுதலை! என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Director vetrimaran, Ilaiyaraja, Thol Thirumaavalavan