நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வரவிருப்பதாகவும், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாகவும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் உடல் நலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக அரசியல் கட்சி துவங்கும் முடிவை கைவிட்டார்.
இதனையடுத்து சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய ரஜினிகாந்த், ''அரசியல்ல நான் இறங்கணும்னு முடிவெடுத்தப்போ எதிர்பாராதவிதமா கொரோனா வந்திருச்சு. இரண்டாவது அலையும் ஸ்டார்ட் ஆயிருச்சு. என் உடல்நிலைக்கு மாஸ்க் கண்டிப்பாக வேண்டும். 10அடி தள்ளி இருக்க வேண்டும் என மருத்துவர் கூறினார். ஆனால் இதெல்லாம் சாத்தியம் இல்லை என்பதால் அரசியலில் இருந்து விலகினேன்'' என்று விளக்கமளித்திருந்தார்.
இதையும் படிக்க | சொந்த ஹோட்டல் பிரியாணி எப்படி இருந்தது...? ரிவியூ கொடுத்த பிரியா பவானி ஷங்கர்
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் யூடியூப் பக்கம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் நிலைப்பாடு குறித்து பேசினார். அவர் பேசியதாவது, ''ரஜினியிடம் அமர்ந்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு மணிநேரம் பேசினோம். அப்போது அவரை என்னால் இலகுவாக புரிந்துகொள்ள முடிந்தது. சினிமா விவரங்கள் மட்டும் அறிந்தவர் என்று குறைத்து மதிப்பிட முடியாது.
அவருக்கு அரசியலில் கலைஞருடன் நட்பு, எம்ஜிஆருடன் நட்பு, ஜெயலலிதாவுடன் நட்பு, அண்டை மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர்களுடன் நட்பு இருந்து வந்திருக்கிறது. அரசியல் எப்படி இயங்குகிறது என கவனிக்கவும் செய்கிறார்.
கட்சி தொடங்கினால் நான் யாருடைய பிடியிலும் சிக்க மாட்டேன் என்று என்னிடம் சொன்னார். நான் அவரிடம், நீங்கள் ஆர்எஸ்எஸ் உடன் தொடர்பில் இருக்கிறீர்கள். அவர்கள் சொல்லி தான் நீங்கள் கட்சி தொடங்குகிறீர்கள் என்பது போல பேசப்படுகிறது என்று கூறினேன்.
அதற்கு ரஜினிகாந்த், நான் சுதந்திரமானவனாக இருப்பேன் என்றார். ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. இமயமலைக்கு சென்று வந்ததைப் பற்றி என்னிடம் சொன்னார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rajinikanth