ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு படத்தில் இதெல்லாம் தான் ஸ்பெஷல்! விஜய்யை கொண்டாடும் தளபதி ரசிகர்கள்

வாரிசு படத்தில் இதெல்லாம் தான் ஸ்பெஷல்! விஜய்யை கொண்டாடும் தளபதி ரசிகர்கள்

விஜய்

விஜய்

விஜய்யின் முந்தைய படங்களின் ரெஃபரன்ஸ் இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. டிரெய்லரில் சொல்லப்பட்ட அதே குடும்ப சென்டிமென்ட் கதை தான். விஜய்யிடம் என்ன எதிர்பார்ப்போமோ அதனை பக்காவாக திரையில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் வம்சி. குடும்ப சென்டிமென்ட் காட்சிகளும் அதில் இடம் பெற்ற வசனங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

கலவையான விம்ரசனங்களைப் பெற்றாலும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த வகையில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். திருமலையில் கமர்ஷியல் ரூட் பிடித்த விஜய், தொடர்ச்சியாக கில்லி, திருப்பாச்சி, சிவகாசி, குருவி என குடும்ப சென்டிமென்ட்டை மையமாக வைத்த படங்களில் நடித்துவந்தார். அவரது படங்களில் காமெடி, பாடல்கள், சென்டிமென்ட், சண்டைக்காட்சிகள்  ஆகியவை சரியான கலவையில் அமைந்திருக்கும். இதனால் குழந்தைகள் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் இருக்கும். ஆனால் துப்பாக்கி படங்களுக்கு பிறகு கடந்த சில ஆண்டுகளாக சமூக அரசியல் பேசும் படங்களில் நடித்துவருகிறார்.

துப்பாக்கி படம் அவரை தமிழ்நாடு, கேரளா என இருந்த அவர் ரசிகர் வட்டத்தை தெலுங்கு வரை விரிவுபடுத்த உதவியது. அவரது மார்கெட் பெரிதாகியது. படங்களின் பட்ஜெட் கூட, அதற்கேற்ப பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனும் பெரிதாகியது. இருப்பினும் பழைய துள்ளாத மனமும் துள்ளும், கில்லி விஜய்யை குடும்ப ரசிகர்கள் மிஸ் செய்தனர். அவர்களை திருப்திபடுத்தும் வகையில் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்படமாக வெளியாகியிருக்கிறது வாரிசு.

படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவந்தாலும் நாங்கள் எதிர்பார்த்த பழைய விஜய் இந்தப் படத்தில் எங்களுக்கு கிடைத்துவிட்டதாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதற்கேற்ப விஜய்யின் முந்தைய படங்களின் ரெஃபரன்ஸ் இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. யோகி பாபுவுடன் இணைந்து காமெடியில் அசத்தியிருக்கிறார். மேலும் ரெடின் கிங்ஸ்லி போல் ஒரு காட்சியில் விஜய் நடித்திருக்கிறார். மேலும் ஃபேமிலி சென்டிமென்ட் காட்சிகளில் மிகவும் உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார். அட இதைத் தானே இவ்வளவு நாள் மிஸ் செய்திருந்தோம் என விஜய் ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள்.

First published:

Tags: Thunivu, Varisu