முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆம்பளைங்க எல்லாம் வேஸ்ட்.... வனிதாவுக்கு அவரது மகள்கள் கொடுத்த மேரேஜ் அட்வைஸ் - என்ன தெரியுமா?

ஆம்பளைங்க எல்லாம் வேஸ்ட்.... வனிதாவுக்கு அவரது மகள்கள் கொடுத்த மேரேஜ் அட்வைஸ் - என்ன தெரியுமா?

வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார்

அவரது மகள்களிடம் நீங்கள் அம்மாவிற்கு அட்வைஸ் கொடுத்து அதனை அவர் கேட்டிருக்கிறாரா என தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் வனிதா, நடிகர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்திருந்தார். பின்னர் ஒரு சில படங்களில் மட்டுமே அவர் நடித்திருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது அதிரடி நடவடிக்கைகளால் பரபரப்பாக பேசப்பட்டார்.

பின்னர் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்நிகழ்ச்சியில் டைட்டிலை வென்று அசத்தினார். தொடர்ந்து யூடியூபில் குக்கிங் வீடியோக்களைப் பகிர்ந்துவருகிறார். மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாதியில் வெளியேறினார்.

மேலும் பவர் ஸ்டாருக்குஜோடியாக ஒரு படத்தில் நடித்துவருவதாக கூறப்படுகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு சர்ச்சையில் சிக்கினார். இதன் பிறகு இருவரும் பிரிந்தனர்.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் வனிதா தனது மகள்களுடன் கலந்துகொண்டிருந்தார். அப்போது அவரது மகள்களிடம் நீங்கள் அம்மாவிற்கு அட்வைஸ் கொடுத்து அதனை அவர் கேட்டிருக்கிறாரா என தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்ட வனிதா, தினமும் இப்படித்தான் நடக்கிறது. என் இரண்டு மகள்களும் ஒரு நேரத்தில் நகைச்சுவையான அட்வைஸ் ஒன்றை அளித்தார்கள். நீங்க பேசாம ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்க, ஆம்பளைங்க எல்லாம் வேஸ்ட் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

First published:

Tags: Vanitha Vijayakumar