இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் மனோபலா. தமிழில் கிட்டத்தட்ட 700 படங்களுக்கு மேலாக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனக்கே உரிய பாணியில் கலக்கினார்.
பெரும்பாலும் காமெடி வேடங்களில் நடித்து வரும் இவர் தனது யூடியூப் சேனல் மூலம் பிரபலங்களை பேட்டியெடுத்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தற்போது ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஒரு நகைச்சுவை
கடைசியாய்
அழவைத்துவிட்டது
மரணத்தின் இறுதிவரை
இயங்கிக்கொண்டிருந்த
மனோபாலா இன்று இல்லை
திரையின் எல்லாத்
துறைகளிலும் இயங்கியவன்;
எல்லாரோடும் பழகியவன்
இனி இல்லை
ஒல்லியாய் இருப்பவர்கள்
நீண்டநாள் வாழ்வார்கள்
என்ற மனிதக் கணக்கை
மரணம் உடைத்துவிட்டது
என் ஆழ்ந்த இரங்கல் pic.twitter.com/8rDHnL5qUh
— வைரமுத்து (@Vairamuthu) May 3, 2023
பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் இன்று அவர் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிக்க | எனக்காக கோடம்பாக்கம் பாலத்தில் மனோபாலா காத்திருப்பார்... இளையராஜா வெளியிட்ட இரங்கல் வீடியோ...!
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ஒரு நகைச்சுவை கடைசியாய் அழவைத்துவிட்டது. மரணத்தின் இறுதிவரை இயங்கிக்கொண்டிருந்த மனோபாலா இன்று இல்லை. திரையின் எல்லாத் துறைகளிலும் இயங்கியவன். எல்லோரோடும் பழகியவன் இனி இல்லை.
ஒல்லியாய் இருப்பவர்கள் நீண்ட நாள் வாழ்வார்கள் என்ற மனிதக் கணக்கை மரணம் உடைத்துவிட்டது என் ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vairamuthu