முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / திகைக்குமொரு கதை சொன்னாய் - இயக்குநர் பாலாவின் வணங்கான் குறித்து வைரமுத்து கமெண்ட்

திகைக்குமொரு கதை சொன்னாய் - இயக்குநர் பாலாவின் வணங்கான் குறித்து வைரமுத்து கமெண்ட்

இயக்குநர் பாலா - வைரமுத்து

இயக்குநர் பாலா - வைரமுத்து

இயக்குநர் பாலாவின் வணங்கான் குறித்து கவிஞர் வைரமுத்துவின் ட்வீட் வைரலாகிவருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் என தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் பாலா. கடைசியாக விக்ரமின் மகன் துருவ்வை வைத்து அர்ஜுன் ரெட்டியை தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார். அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு திருப்தி அளிக்காததால் வேறு இயக்குநரை வைத்து ஆதித்யா வர்மா என்ற பெயரில் அந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது.

இந்த நிலையில் சிறிது இடைவேளைக்கு பிறகு சூர்யா நடிப்பில் வணங்கான் படத்தைத் துவங்கினார். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தமானார். கன்னியாகுமரியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்றுவந்தது. படப்பிடிப்பு துவங்கி சில நாட்களிலேயே சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே பிரச்னை. இதனால் வணங்கான் கைவிடப்படுகிறது என்று பல்வேறு தகவல்கள் பரவின.

அதற்கேற்ப இந்தப் படம் கைவிடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இயக்குநர் பாலா தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்ற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

நந்தாவில் நான் பார்த்த சூர்யா, பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம் என்று விளக்கமளித்திருந்தார்.

இந்த நிலையில் அருண் விஜய் நடிப்பில் இந்தப் படம் உருவாகிவருகிறது. ரோஷினி பிரகாஷ் இந்தப் படத்தில் நாயகியாக நடித்துவருகிறார். இந்தப் படத்துக்கு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். இந்த நிலையில் பாலா குறித்து வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.

அதில், பாலா! தேடி வந்தாய்;

திகைக்குமொரு கதை சொன்னாய்;

இதிலும் வெல்வாய்

உடம்பில் தினவும்

உள்ளத்தில் கனவும்

உள்ளவனைக்

கைவிடாது கலை

ஐந்து பாட்டிலும்

ஐந்தமிழுக்கு வழிவைத்தாய்

தீராத கங்குகளால்

பழுத்துக்கிடக்கிறது

என் பட்டறை

தோற்காத ஆயுதங்கள்

வடித்துக் கொடுப்பேன்

போய் வா!

top videos

    என்று குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: Vairamuthu