முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'கலைஞர்களுக்கு வயதானால்....' - இளையராஜா குறித்து மனம் திறந்து பேசிய வைரமுத்து

'கலைஞர்களுக்கு வயதானால்....' - இளையராஜா குறித்து மனம் திறந்து பேசிய வைரமுத்து

இளையராஜா - வைரமுத்து

இளையராஜா - வைரமுத்து

கருமேகங்கள் கலைகிறது டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இளையராஜா குறித்து வைரமுத்து பேசினார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான தங்கர் பச்சான் நீண்ட இடைவேளைக்கு பிறகு ’கருமேகங்கள் கலைகிறது’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் தங்கர் பச்சான், கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், கௌதம் வாசுதேவ் மேனன், லோகேஷ் கனகராஜ், யோகி பாபு உள்ளிட்ட பங்கேற்றனர்.

இதையும் படிக்க |  முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய வடிவேலு - எந்தப் படத்துக்காக தெரியுமா?

விழாவில் இளையராஜா குறித்து வைரமுத்து பேசியதாவது, ''இவருடைய இசை இன்னும் தீர்ந்து போகவில்லை. இன்னும் பழையதாகவில்லை. தமிழ் திரையுலகம் அவரது பணியை வாங்கி வைத்துக்கொள்ளாமல் ஏன் தூங்கி நிற்கிறது என எனக்கு தெரியவில்லை. சொல்லப்போனால் கலைஞர்களுக்கு வயது ஆக ஆகத்தான் முதிர்ச்சி கூடிவரும். கலையில் ஒரு தெளிவு வரும். தீர்க்கமும் திட்டமும் வரும்.

நடிகர்களுக்கு வயதானால் அவருடைய சந்தை சரியும். கலைஞர்களுக்கு வயதானால் அவர் சந்தை பெருகும். பெருக வேண்டும். ஏன் பெருகவில்லை எனத் தெரியவில்லை. மிகச் சிறந்த இயக்குநர்களும் இவரை மீண்டும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்றார்.

top videos
    First published:

    Tags: Ilaiyaraja, Vairamuthu