முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / முதல்வர் ஸ்டாலினின் பயோபிக்கில் உதயநிதி நடிக்கணும், அவரை கட்டாயப்படுத்துவோம் - வடிவேலு அதிரடி

முதல்வர் ஸ்டாலினின் பயோபிக்கில் உதயநிதி நடிக்கணும், அவரை கட்டாயப்படுத்துவோம் - வடிவேலு அதிரடி

உதயநிதி ஸ்டாலின் - மு.க.ஸ்டாலின் - வடிவேலு

உதயநிதி ஸ்டாலின் - மு.க.ஸ்டாலின் - வடிவேலு

முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்க்கை பயணம் குறித்த கதையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க வேண்டும் என்று வடிவேலு தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படக் கண்காட்சி மதுரை மேனேந்தல் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தக் கண்காட்சியை அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் பார்வையிட்டுவருகின்றனர். அந்த வகையில் நடிகர் வடிவேலு நேரில் வந்து பார்வையிட்டார். அவருடன் அமைச்சர் மூர்த்தியும் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு வடிவேலு பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர், ’இங்க பார்த்த படமெல்லாம் வெறும் படமல்ல. எல்லாம் நிஜம். என் நெஞ்சமெல்லாம் நெகிழ்ச்சியாக இருக்கு. இது எல்லா மனிதர்களுக்கும் தைரியம் தன்னம்பிக்கை கொடுக்கும் புகைப்படக் கண்காட்சியாக உள்ளது. பல போராட்டங்களை கடந்த பின்னர் முதலமைச்சர் இந்த இடத்திற்கு வந்துள்ளார். கலைஞராக தான் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட வந்துள்ளேன். நடிகராக வரவில்லை என்றார்.

முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்க்கை பயணம் குறித்த கதையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க வேண்டும். உதயநிதி நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இருப்பினும் அவரை கட்டாயப்படுத்தி நடிக்க வைப்போம். என்றார்.

மேலும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் பரப்புரையில் ஈடுபடுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், காலம் பதில் சொல்லும் நல்லது நடந்துகொண்டு இருக்கிறது என்று தெரிவித்தார்.

First published:

Tags: Actor Vadivelu, CM MK Stalin, Udhayanidhi Stalin