முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பொன்னியின் செல்வன் 2: ''பரிசு காத்திருக்கிறது... நீங்கள் செய்ய வேண்டியது...'' - திரிஷா வெளியிட்ட வீடியோ

பொன்னியின் செல்வன் 2: ''பரிசு காத்திருக்கிறது... நீங்கள் செய்ய வேண்டியது...'' - திரிஷா வெளியிட்ட வீடியோ

பொன்னியின் செல்வன் குறித்து  திரிஷா அறிவிப்பு

பொன்னியின் செல்வன் குறித்து திரிஷா அறிவிப்பு

இந்தப் படத்தில் குந்தவையாக நடித்துள்ள திரிஷா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, பார்த்திபன் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்திருக்கின்றன.

ரவிவர்மன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் பின்னணி இசைக்காக இயக்குநர் மணிரத்னமும், ஏ.ஆர்.ரஹ்மானும் லண்டன் சென்றிருந்தனர். இந்தப் படத்தின் டிரெய்லர் வருகிற 29 ஆம் தேதி வெளியாகிறது. முன்னதாக இந்தப் படத்திலிருந்து வெளியான அக நக பாடல் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் குந்தவையாக நடித்துள்ள திரிஷா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், பேசும் திரிஷா, பொன்னியின் செல்வன் பட அக நக பாடலைக் கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

இந்தப் பாடலின் உங்கள் வெர்ஷனை பாடி #AgaNagaCoversContest!என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிடுங்கள். நீங்கள் பதிவிடும் அனைத்தையும் நான் கேட்கவிருக்கிறேன். அதில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷடசாலிகளுக்கு பரிசு காத்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

top videos
    First published:

    Tags: Actress Trisha, Mani ratnam, Ponniyin selvan