தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார் நடிகை த்ரிஷா. மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடித்துள்ள த்ரிஷா, குந்தவை கதாபாத்திரத்தை பிரபலப்படுத்தும் நோக்கில், முதல் பாகம் வெளியான போது தனது ட்விட்டர் ஹேண்டிலில் குந்தவை எனப் பெயர் மாற்றியிருந்தார். இதேபோல ஜெயம் ரவி அருண்மொழி வர்மன் எனவும், நடிகர் கார்த்தி வந்தியத்தேவன் என்றும் பெயரை மாற்றியிருந்தனர்.
இதையும் படிக்க | சிம்பு பட நடிகையை தரதரவென இழுத்து சென்ற கணவர்... இதுதான் காரணமா?
இந்த நிலையில் வரும் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியாக உள்ளது. திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் உள்ளிட்ட படக் குழுவினர் புரோமோஷனில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த சூழலில், நடிகை திரிஷா, தனது ட்விட்டர் ஹேண்டிலில் குந்தவை எனப் பெயர் மாற்றினார். இதேபோல் ஜெயம் ரவியும் டிவிட்டர் ஹேண்டிலில் பெயரை மாற்றினார்.
இதையடுத்து, இருவருக்கும் வழங்கப்பட்டு இருந்த புளூ டிக் பறிக்கப்பட்டது. ட்விட்டரின் புதிய விதிகளின்படி ப்ளூ டிக் பெறுவதற்கு சமர்பிக்கப்படும் ஆவணங்களில் இல்லாத பெயரை மாற்றினால், ப்ளூ டிக் பறிக்கப்படும். அந்த வகையிலேயே த்ரிஷா மற்றும் ஜெயம் ரவியின் புளூடிக் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, ட்விட்டர் ஹேண்டிலில் குந்தவை என்ற பெயருக்கு பதிலாக த்ரிஷா மீண்டும் தனது பெயரை மாற்றிய போதிலும், புளூ டிக் வழங்கப்படவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.