பொன்னியின் செல்வன் Anthem பாடல் வெளியீட்டு விழா விழாவில் கலந்து கொண்ட நடிகர்கள் கார்த்தி, விக்ரம் மற்றும் திரிஷா ஆகியோரிடம் அவர்களின் அடுத்த படங்களின் அப்டேட்டுகளை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கேட்டனர்.
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் ஆந்தம் பாடல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னணியில் நடைபெற்ற அந்த விழாவில், நடிகர்கள் கார்த்தி, விக்ரம், நடிகை திரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தை பற்றியும், அதில் நடித்த அனுபவும் பற்றியும் மேடையில் பேசினார்.
அவரிடம் அங்கு இருந்த மாணவர்கள் கைதி-2 படத்தின் அப்டேட்டுகளை கேட்டனர். அதற்கு கைதி முதல் பாகத்தில் இடம்பெறும் ஒரு வசனத்தை பேசி சூசகமான தகவலை கார்த்தி கொடுத்தார்.
அதேபோல் நடிகர் விக்ரம் பேசுகையில், பா.ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்து வரும் தங்கலான் திரைப்படத்தின் அப்டேட்டை கேட்டனர். அது தனக்கு கேட்காதது போல் ஜாலியாக சமாளித்தார் விக்ரம். இவர்களைப் போலவே நடிகை திரிஷாவிடம், தற்போது விஜயுடன் அவர் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் அப்டேட்டை மாணவர்கள் கேட்டனர். அதற்கு நடிகை திரிஷா அந்தப் படம் பற்றி பிறகு பேசுவோம் என கூறி, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த அனுபவத்தை கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Trisha, Ponniyin selvan