முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நானும் ஐஸ்வர்யாவும் விக்ரமை டிஸ்டர்ப் பண்ணுவோம் - கியூட்டாக பேசிய திரிஷா

நானும் ஐஸ்வர்யாவும் விக்ரமை டிஸ்டர்ப் பண்ணுவோம் - கியூட்டாக பேசிய திரிஷா

திரிஷா - விக்ரம்

திரிஷா - விக்ரம்

இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விக்ரம் குறித்து திரிஷா பேசியது வைரலாகிவருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஷோபிதா ஆகியோர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

நிகழ்வில் பேசிய திரிஷா, ''ஏப்ரல் 28 ஆம் தேதி படத்தை பார்த்து உங்களது கருத்துக்களை சொல்லுங்க. படத்தைப் பற்றி பயமோ, பதட்டமோ இல்ல. மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. மணி சார் ஐ லவ் யூ. மணி சாரின் குந்தவையாக எப்பொழுதும் நினச்சுப்பேன். புதுமுக நடிகையாக அவருடன் பணிபுரிந்தேன். இப்பொழுது 20 வருடங்கள் கழித்து மீண்டும் அவருடன் பணியாற்றியிருக்கிறேன். இதற்காக நன்றியுள்ளவளாக இருப்பேன்.

இதையும் படிக்க |  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புதிதாக 2 போட்டியாளர்கள் - யார் தெரியுமா?

நானும் ஐஸ்வர்யாவும் விக்ரம் தூங்கும்போது போய் டிஸ்டர்ப் பண்ணுவோம். நிறுத்துங்க, நான் தூங்கனும்னு கத்துவார். விக்ரம், கார்த்தி, ரவி ஆகியோருடன் இருக்கும்போது ஒரு பெண்ணாக அசாதாரணமான சூழ்நிலையை எதிர்கொள்ளவில்லை. எங்களை நன்றாக பார்த்துக்கொண்டார்கள். எங்களை பாதுகாப்பாக வைத்திருந்ததற்கு நன்றி. கார்த்தியை ஆயுத எழுத்து படத்தில் மீட் பண்ணேன். அவர் எனக்கு பைக் ஓட்ட சொல்லிக்கொடுத்தார்'' என்று பேசினார்.

First published:

Tags: Actress Trisha, Ponniyin selvan