முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஷாருக்கான் படத்தை காப்பி அடித்தாரா டாம் குரூஸ்.? விவாதமான ரயில் காட்சி!

ஷாருக்கான் படத்தை காப்பி அடித்தாரா டாம் குரூஸ்.? விவாதமான ரயில் காட்சி!

பதான் - மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங்

பதான் - மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங்

ஷாருக் உலகளவில் ஒரு ‘டிரெண்ட்செட்டர்’ என்று பலர் இது குறித்து குறிப்பிட்டனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

டாம் குரூஸின் மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் பகுதி ஒன்றின் டிரெய்லர் புதன்கிழமை இரவு வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லரில் சில  அதிரடி காட்சிகள் மற்றும் டாம் குரூஸின் வழக்கமான காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. ஆனால் பல இந்திய ரசிகர்களின் கண்களைக் கவர்ந்த ஒரு காட்சி என்னவென்றால், டாம் எப்படி ரயில் விபத்தில் இருந்து தப்பித்தார் என்பது தான். காரணம் ஷாருக்கானின் பதான் படத்தில் இதே போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் பாகம் ஒன்று, மிஷன் இம்பாசிபிள் 7 என்றும் அழைக்கப்படுகிறது. இதில் டாம் குரூஸின் ஈதன் ஹன்ட் மற்றும் அவரது இம்பாசிபிள் மிஷன் ஃபோர்ஸ், தங்கள் பணியை தொடங்குகின்றனர். ட்ரெய்லரில் உள்ள ஒரு காட்சியில் டாம் மற்றும் படத்தின் எதிரியான ஈஸி மோரல்ஸ் இருவரும், வேகமாக ஓடும் ரயிலில் ஒருவரையொருவர் எதிர்த்து நிற்கிறார்கள். ரயில் பின்னர் ஒரு உடைந்த பாலத்தில் செல்கிறது, அங்கு எப்படியாவது பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதன் கடைசி ஷாட் டாமின் கதாபாத்திரம், அன்பான வாழ்க்கைக்காக தொங்கிக்கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

ஷாருக்கானும் சல்மான் கானும் ஓடும் ரயிலில் ரஷ்ய காவலர்களுடன் சண்டையிட்டு, அதே ஸ்டைலில் ரயிலில் இருந்து தப்பிக்கும் பதானின் இடைவெளிக்குப் பிறகான காட்சியை இந்தக் காட்சி நினைவுப்படுத்துகிறது. இதனால் ஷாருக்கானின் ரசிகர்கள் இந்த இரண்டு காட்சிகளை ஒப்பிட்டுப் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். ஷாருக் உலகளவில் ஒரு ‘டிரெண்ட்செட்டர்’ என்று பலர் இது குறித்து குறிப்பிட்டனர்.

சுவாரஸ்யமாக, பதான் காட்சியே 20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஜாக்கி சானின் கார்ட்டூன் நிகழ்ச்சியான, ஜாக்கி சான் அட்வென்ச்சர்ஸில் இருந்து நேரடியாக காப்பியடிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் ஜாக்கியின் பாத்திரம் ஏறக்குறைய பதான் படத்தில் காட்டப்பட்டதைப் போலவே ரயிலில் இருந்து தப்பிக்கும்படி இருந்தது.

' isDesktop="true" id="984054" youtubeid="avz06PDqDbM" category="cinema">

மிஷன்: இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் பகுதி ஒன்று ஜூலை 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கிறிஸ்டோபர் மெக்குவாரி இயக்கிய இந்த படத்தில் ஹேலி அட்வெல், விங் ரேம்ஸ், சைமன் பெக், ரெபெக்கா பெர்குசன், வனேசா கிர்பி மற்றும் ஹென்றி செர்னி ஆகியோர் நடித்துள்ளனர்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Shah rukh khan