தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் மகனும் பிரபல தெலுங்கு நடிகருமான வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா இருவரும் மிஸ்டர் மற்றும் அந்தாரிக்ஷம் ஆகிய தெலுங்கு படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இதனையடுத்து இருவரும் ஜோடியாக பார்ட்டி, குடும்ப நிகழ்வுகள் ஆகியவற்றில் கலந்துகொண்டனர். இதனையடுத்து இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இருவரும் அடுத்த மாதம் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் இருவீட்டார் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் இதுவரை இருவரும் இதுகுறித்து வெளிப்படையாக அறிவிக்கவோ மறுக்கவோ இல்லை.
இதையும் படிக்க | மார்பகத்தை கமெண்ட் பண்றாங்க... வேதனையை வெளிப்படுத்திய நீலிமா ராணி!
சீரஞ்சிவியின் சகோததரரும் நடிகருமான நாகபாபுவின் மகன் வருண் தேஜ் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கந்தீவரி அர்ஜுனா என்ற படத்தில் நடித்துவருகிறார். நடிகை லாவண்யா தமிழில் சசிகுமாருக்கு ஜோடியாக பிரம்மன் மற்றும் மாயவன் ஆகிய இரு படங்களில் மட்டும் நடித்திருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Varun tej