முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / “என்னை பாராட்டியது நெஞ்சில் நிழலாடுகிறது” - மனோபாலா மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

“என்னை பாராட்டியது நெஞ்சில் நிழலாடுகிறது” - மனோபாலா மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Actor Manobala Death | மனோபாலா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

திரைப்பட இயக்குனரும், நடிகருமான  மனோபாலா மறைவுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகரும் இயக்குநருமான மனோபாலா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது உடலுக்கு திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மனோபாலா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்ட இரங்கல் செய்தியில், "திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான  மனோபாலா உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

' isDesktop="true" id="963231" youtubeid="9oI4utw51Ys" category="cinema">

சமீபத்தில் என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு அவர் பாராட்டி பேசியது இந்தத் தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது.

மனோபாலாவின் மறைவால் அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: CM MK Stalin