முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'புஷ்பா' அல்லு அர்ஜுன் கெட்டப்பில் ஊர்வலம் வந்த திருப்பதி எம்பி - எதுக்காக தெரியுமா?

'புஷ்பா' அல்லு அர்ஜுன் கெட்டப்பில் ஊர்வலம் வந்த திருப்பதி எம்பி - எதுக்காக தெரியுமா?

அல்லு அர்ஜுன் - திருப்பதி எம்பி குருமூர்த்தி

அல்லு அர்ஜுன் - திருப்பதி எம்பி குருமூர்த்தி

திருப்பதி கங்கை அம்மன் கோவில் விழாவில் புஷ்பா 2 அல்லு அர்ஜுனின் தோற்றத்தில் திருப்பதி எம்பி குருமூர்த்தி கலந்துகொண்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆந்திர மாநிலம் திருப்பதி கங்கை அம்மன் கோவில் விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுவருகிறது. நாட்டுப்புற கலைகளுடன் இந்த விழாவை மக்கள் கொண்டாடிவருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பதி எம்பி குருமூர்த்தி மாதங்கி தோற்றத்தில் கலந்துகொண்டு அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தார். சமீபத்தில் வெளியான புஷ்பா 2 பட புரமோ வீடியோவில் கூட மாதங்கி தோற்றத்தில் அல்லு அர்ஜுன் காட்சியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | மலையாளத்தில் வசூல் சாதனை படைத்துவரும் டோவினோ தாமஸின் '2018'

மாதங்கி தோற்றத்தில் எம்பி குருமூர்த்தி மேலதாளங்கள் முழங்க ஆனந்த வீதி என்ற பகுதியிலிருந்து கங்கை அம்மன் கோவில் வரை ஊர்வலமாக வந்தார். அப்போது அப்பகுதி மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

top videos

    மேலும் சிலர் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். பின்னர் கங்கை அம்மன் கோவிலில் வழிபாடு செய்தார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

    First published:

    Tags: Allu arjun