முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பா.ரஞ்சித்தை தொடர்ந்து தனுஷ் பட இயக்குநருடன் இணையும் விக்ரம்

பா.ரஞ்சித்தை தொடர்ந்து தனுஷ் பட இயக்குநருடன் இணையும் விக்ரம்

விக்ரம்

விக்ரம்

பொன்னியின் செல்வன் 2, தங்கலான், துருவ நட்சத்திரம் என அடுத்தடுத்து 3 பெரிய படங்கள் விக்ரமிடம் உள்ளன. இதில், துருவ நட்சத்திரம் மற்றும் பொன்னியின் செல்வன் 2 ஷூட்டிங் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில்  மெகா பட்ஜெட்டில் பீரியட் படமாக உருவாகி வருகிறது ‘தங்கலான்’ படம்.

இந்தப் படத்தில் நடிகை பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹாலிவுட் நடிகர் டான் கால்டஜிரோனா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

கர்நாடகாவின் கோலார் தங்க வயல்களில், சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதையாக இப்படம் இயக்கப்பட்டு வருகிறது. இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 15-ம் தேதி கேஜிஎஃப்பில் தொடங்கி நடைபெற்று வருகிறது. படத்தின் பிரதான கதைக்களமான கேஜிஎஃப் கதைக்களத்தில் நடக்கும் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அடுத்த மாத இறுதிக்குள் ‘தங்கலான்’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2, தங்கலான், துருவ நட்சத்திரம் என அடுத்தடுத்து 3 பெரிய படங்கள் விக்ரமிடம் உள்ளன. இதில், துருவ நட்சத்திரம் மற்றும் பொன்னியின் செல்வன் 2 ஷூட்டிங் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளன.

தங்கலான் படத்தின் படப்பிடிப்பில் தீவிரம் காட்டி வரும் விக்ரம் அடுத்ததாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவரது இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடதக்கது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actor Vikram, Mari selvaraj