முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் - தலைவராக தேனாண்டாள் முரளி தேர்வு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் - தலைவராக தேனாண்டாள் முரளி தேர்வு

தேனாண்டாள் முரளி

தேனாண்டாள் முரளி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்ட தேனாண்டாள் முரளி அணியினர் அனைத்து நிர்வாகப் பொறுப்பிற்கும் தேர்வு ஆகியுள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் வாக்களித்தனர்.

இந்தத் தேர்தலில் மொத்தம் 1111 வாக்குகள் பதிவாகி இருந்தன. அதில் முதலில் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதில் தேனாண்டாள் முரளி வெற்றி அடைந்தார். அதேபோல் அவர் அணியில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட சந்திர பிரகாஷ் ஜெயின் வெற்றியடைந்தார்.

இதையும் படிக்க |  இதை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் - முன்னாள் கணவர் மறைவு குறித்து வனிதா உருக்கம்

இதற்குப் பிறகு செயலாளர் பதவிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. அதில் ராதாகிருஷ்ணன், கதிரேசன், கமீலா நாசர் ஆகிய மூவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் தேனாண்டாள் முரளி அணியை சேர்ந்த கதிரேசன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெற்றியடைந்தனர். இதன் மூலம் தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலில் நிர்வாக குழுவில் தேனாண்டால் முரளி அணியினர் வெற்றியடைந்தனர். இதற்குப் பிறகு செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.

First published:

Tags: Producer Council, Tamil cinema Producer council