மலையாளத்தில் டோவினோ தாமஸ், குஞ்சாக போபன், நரேன் உள்ளிட்டோ நடிப்பில் வெளியாகி வெற்றி அடைந்த 2018 படத்தை தமிழகத்தில் டப் செய்து வெளியிட்டுள்ளனர்.
ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் கடந்த 5-ம் தேதி '2018' என்ற மலையாள திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. அதுவும் 10 நாட்களில் 13 கோடி ரூபாய் வசூல் செய்து பெரும் சாதனையை மலையாள திரை உலகில் நிகழ்த்தியது.
இந்த நிலையில் '2018' படத்தை தற்போது தமிழில் டப் செய்து இன்று தமிழகம் முழுவதும் சுமார் 100 திரையரங்குகளுக்கு மேல் வெளியிட்டுள்ளனர். கேரளாவில் 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை முழு கதையாக்கி படமாக்கியுள்ளார் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப்.
அந்த மழை வெள்ளம் எவ்வாறு ஏற்பட்டது? அதற்கு பின் இருந்த அரசியல், மக்களின் ஒற்றுமை, மக்களின் அவல நிலை என ஒவ்வொரு விஷயங்களையும் மிக நுணுக்கமாக படமாக்கியுள்ளனர். குறிப்பாக, அந்த ஒரு வார காலம் மக்களின் இயல்பு வாழ்க்கை எப்படி பாதிக்கப்பட்டது, என்ன துயரங்கள் அனுபவித்தார்கள் என்பதை மிக இயல்பாகவும் எதார்த்தமாகவும் கண்முன் நிறுத்தியுள்ளார் இயக்குனர்.
Also read... “வெரி டர்ட்டி வில்லன்” - இணையத்தில் கவனம்பெறும் கார்த்தியின் ‘ஜப்பான்’ பட டீசர்!
மேலும் படம் பார்க்கும் நமக்கு ஒரு மழை காலத்தில், வெள்ளம் சூழ்ந்த பகுதிக்குள் இருப்பது போன்ற உணர்வை '2018' படம் ஏற்படுத்தி விடுகிறது. அதுவே படத்தின் வெற்றிக்கு உதவியுள்ளது. மலையாளத்தில் பெரும் வெற்றியடைந்த இந்த திரைப்படத்தை தமிழில் மிகுந்த நம்பிக்கையுடன் வெளியிட்டுள்ளனர். இந்த படம் மலையாளம் போல் தமிழிலும் வெற்றி அடையும் என எதிர்பார்க்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entertainment