முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சம்பவம் இருக்கு..! மிரட்டும் தங்கலான் மேக்கிங் வீடியோ.. விக்ரம் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.!

சம்பவம் இருக்கு..! மிரட்டும் தங்கலான் மேக்கிங் வீடியோ.. விக்ரம் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.!

தங்கலான் படத்தில் நடிகர் விக்ரம்

தங்கலான் படத்தில் நடிகர் விக்ரம்

Thangalaan making video | விக்ரமனின் 57வது பிறந்த நாளை முன்னிட்டு தங்கலான் படக்குழு மேக்கிங் வீடியோ வெளியிட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் மேக்கிங்க் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மெட்ராஸ், சர்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்கிய பா.இரஞ்சித் அடுத்து நடிகர் விக்ரமை வைத்து தங்கலான் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கே.ஜி.எஃப்-ஐ மையமாக வைத்து வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக தங்கலான் உருவாகி வருகிறது. தங்கலான் திரைப்படத்தை 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கி வருகின்றனர். இப்படத்தில் மலையாள நடிகை பார்வதி, மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

பா.ரஞ்சித் -விக்ரம் கூட்டணி அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் தங்கலான் படத்திற்கு ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இன்று நடிகர் விக்ரம் 57வது பிறந்த நாளை முன்னிட்டு தங்கலான் படக்குழு மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

' isDesktop="true" id="943017" youtubeid="VSaky5ZMGCY" category="cinema">

top videos

    கே.ஜி.எஃப் பின்னனியில் மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த கதையில் நடிகர் விக்ரம் கடுமையாக உழைப்பை செலுத்தி வருகிறார் என்பது இந்த வீடியோவில் தெரிவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஆளே தெரியாத அளவுக்கு நடிகர் விக்ரம் தங்கலான் படத்தில் நடித்து அனைவரையும் வியக்க வைத்துள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றனர்.

    First published:

    Tags: Actor Vikram, Pa.rajnith