முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரூ.20 லட்சம் டெபாசிட் செய்ய ஒப்புக்கொண்ட லிங்குசாமி- சிறை தண்டனையை நிறுத்திவைத்த சென்னை உயர் நீதிமன்றம்

ரூ.20 லட்சம் டெபாசிட் செய்ய ஒப்புக்கொண்ட லிங்குசாமி- சிறை தண்டனையை நிறுத்திவைத்த சென்னை உயர் நீதிமன்றம்

லிங்குசாமி

லிங்குசாமி

காசோலை மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில் "எண்ணி ஏழு நாள்" படத்தை தயாரிப்பதற்காக, 'நான் ஈ', 'இரண்டாம் உலகம்' படங்களைத் தயாரித்த பி.வி.பி கேப்பிடல் நிறுவனத்திடமிருந்து 1.3 கோடி ரூபாயை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக பங்குதாரர் என்கிற முறையில் இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் கடனாக பெற்றிருந்தனர்.

கடனுக்காக லிங்குசாமி கொடுத்த 1.35 லட்ச ரூபாய்க்கான காசோலை வங்கியில் பணமில்லாமல் திரும்பியதால், பிவிபி நிறுவனம் தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், இருவருக்கும் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து 2022 ஆகஸ்ட் 22ம் தேதி தீர்ப்பளித்தது.

இதையும் படிக்க | அயலான் ரிலீஸ் தேதி அறிவிப்பு... அடுத்தடுத்து வெளியாகும் சிவகார்த்திகேயன் படங்கள்..!

இதனை எதிர்த்து லிங்குசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், தடை விதிக்கக்கோரியும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகளான இயக்குநர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி வி.சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தபோது,  காசோலை தொகையில் 20 சதவீதம் ஏற்கனவே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது மேலும் 20 சதவீதத்தை டெபாசிட் செய்ய தயாராக இருப்பதாகவும் லிங்குசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

top videos

    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 20 சதவீத தொகையை 6 வாரங்களில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன், லிங்குசாமிக்கு விதித்த ஆறு மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

    First published:

    Tags: Director lingusamy