சர்ச்சைக்குரிய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு நாட்டிலேயே முதல் மாநிலமாக மேற்கு வங்க அரசு தடை விதித்துள்ள நிலையில், தமிழ்நாடு உள்பட காட்சிகள் ரத்து செய்யப்பட்ட மாநிலங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் விபுல் ஷா எச்சரித்துள்ளார்.
லஜ் ஜிகாத் என்ற சொல்லாடலை மையமாக கொண்டு உருவான தி கேரளா ஸ்டோரி, ட்ரெய்லர் வெளியானதில் இருந்தே பல்வேறு சர்ச்சைக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகி வருகிறது. கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் கண்டனத்தை பதிவு செய்துள்ளன.
ஆனால், இப்படம் பயங்கரவாதத்துக்கு எதிரான விழிப்புணர்வு என்று கூறி பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜகவினர் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். சிறந்த படம் எனக் கூறி மத்திய பிரதேச அரசு வரி விலக்கு அளித்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை உளவுத் துறை எச்சரிக்கைக்கு மத்தியில் சென்னையில் 12 திரையரங்குகளிலும், கோவையில் 3 திரையரங்குகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்தி பதிப்பு மட்டும் திரையிடப்பட்டது.
இதையும் படிங்க: சர்ச்சைக்குள்ளான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் - 3 நாட்களில் இத்தனை கோடி வசூலா?
இதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளும் நாம் தமிழர் கட்சியும் போராட்டத்தில் குதித்த நிலையில், அந்த காட்சிகளையும் ரத்து செய்வதாக திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்தனர். இந்நிலையில், நாட்டிலேயே முதல் மாநிலமாக தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு மேற்கு வங்க மாநிலம் தடை விதித்துள்ளது.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காஷ்மீர் பைல்ஸ் பட வரிசையில் பெங்கால் படம் ஒன்றுக்கும் பாஜக நிதியுதவி செய்வதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் அகற்றப்படுவதை உறுதி செய்யுமாறு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் அமைதியை நிலைநாட்டவும், வெறுப்பு உணர்வு வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசின் மீது இது குறித்து சட்ட நடவடிக்கை எடுப்போம் என படத்தின் தயாரிப்பாளர் விபுல் ஷா தெரிவித்துள்ளார்.தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்வதன் மூலம், மேற்கு வங்காளத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூரும் கருத்து தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anurag Thakur, Tamil cinema news