முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சர்ச்சைக்குள்ளான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் - 3 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

சர்ச்சைக்குள்ளான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் - 3 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

தி கேரளா ஸ்டோரி

தி கேரளா ஸ்டோரி

சர்ச்சைக்குள்ளான தி கேரளா ஸ்டோரி படத்தின் 3 நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படத்தில் கேரளாவை சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.

இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தன. கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். சுதிப்தோ சென் இயக்கத்தில் மலையாளத்தில் உருவான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 5 ஆம் தேதி வெளியாகியது.

இதையும் படிக்க |  பாரதிராஜாவும், கௌதம் மேனனும் விஜய்யை வேணாம்னு சொல்லிட்டாங்க... - ஓபனாக பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர்

தமிழ்நாட்டில் முதல் போலீஸ் பாதுகாப்புடன் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் மட்டும் இந்தப் படம் திரையிடப்பட்டது. இந்த நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்னை மற்றும் படத்துக்கு வரவேற்பு இல்லாத காரணத்தால் நேற்று முதல் இந்தப் படம் திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திய அளவில் இந்தப் படம் 3 நாட்களில் ரூ.35 கோடி வசூலித்துள்ளது. கார்டியன்ஸ் ஆஃப் தி காலக்ஸி படத்தின் வசூலை இந்தப் படம் முந்தியது. கார்டியன் ஆஃப் தி காலக்ஸி படம் 3 நாட்களில் ரூ.30 கோடி வசூலித்திருக்கிறது.

First published:

Tags: Box office, Collection