முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வணங்கான் முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த பாலா!

வணங்கான் முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த பாலா!

இயக்குநர் பாலா

இயக்குநர் பாலா

இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அதேபோல் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வணங்கான் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் தொடங்கிய திரைப்படம் வணங்கான். ஆனால் அந்த திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பில் பாலா - சூர்யா  இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின் படம் தொடங்குமா அல்லது தொடங்காதா என்ற கேள்வி எழுந்து வந்தது.

இந்த நிலையில் இயக்குனர் பாலா,  வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகுகிறார் என அறிக்கையை வெளியிட்டார். அதன் பின் யார் அந்த திரைப்படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் அருண் விஜய் அந்த திரைப்படத்தில் நடிப்பார் என பாலா தரப்பினர் அறிவித்தனர்.

அதன்படி வணங்கான் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மீண்டும் கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த முறை அருண் விஜய் நாயகனாக நடிக்க தொடங்கினார்.  அதன் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பை வரும் ஏப்ரல் 17ஆம் தேதி திருவண்ணாமலையில் தொடங்க உள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அதேபோல் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். சூர்யா நடிக்கும் பொழுது அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்தார். ஆனால் அவரும் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actor Arun Vijay, Director bala