முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இஸ்லாம் மதத்திற்கு எதிரானது இல்லை ஃபர்ஹானா படம் - படக்குழு விளக்கம்!

இஸ்லாம் மதத்திற்கு எதிரானது இல்லை ஃபர்ஹானா படம் - படக்குழு விளக்கம்!

ஃபர்ஹானா படம்

ஃபர்ஹானா படம்

ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் ஃபர்ஹானா என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் அந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. அதில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ஃபர்ஹானா திரைப்படம் இஸ்லாம் மதத்திற்கு எதிராகவோ அல்லது பிரச்சாரம் பண்ணும் வகையிலோ எடுத்த படம் அல்ல என படக் குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.

ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் ஃபர்ஹானா என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் அந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. அதில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தின் டீசர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இஸ்லாம் அமைப்புகள் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா, அனுமோல், ரமேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ள மனுஷய புத்திரன் பேசுகையில், ஃபர்ஹானா படத்தின் வெளியீட்டுக்காக காத்திருந்ததாக தெரிவித்தார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷின் படங்கள் வெளியிட்டை குறித்தும் நகைச்சுவையாக கூறினார்.

இவரைத் தொடர்ந்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், தன்னுடைய திரைப்படங்களின் வெளியீட்டை தான் தீர்மானிப்பது இல்லை என்று கூறினார். அத்துடன் ஃபர்ஹானா திரைப்படம் மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும் எனவும், சிலர் நினைப்பது போன்று சர்ச்சையை ஏற்படுத்தும் படமாக இது இருக்காது எனவும் தெரிவித்தார்.

Also read... கவின் அடுத்தப் படம் இந்த இயக்குநருடன் தானா? - வெளியானது புது தகவல்!

இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் ஃபர்ஹானா திரைப்படம் உருவான விதம் குறித்து விரிவாக விளக்கினார். மேலும் இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என இஸ்லாம் அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கு குறித்து பேசிய அவர் ஃபர்ஹானா திரைப்படம் இஸ்லாம் மதத்திற்கு எதிராகவோ அல்லது பிரச்சாரம் பண்ணும் வகையிலோ எடுத்த படம் அல்ல. இஸ்லாமிய நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கும் வகையிலேயே ஃபர்கானாவை எடுத்துள்ளேன் என விளக்கம் அளித்தார்.

இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் பேசுகையில் ஃபர்ஹானாவில் மனிதர்களை பிரச்சினையாக காட்டாமல், மனிதர்களின் பிரச்சினையை காட்டியுள்ளோம். இதில் எந்த சர்ச்சையும் இல்லை என உறுதி அளித்தார்.

ஃபர்ஹானாவை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் படக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் 12-ம் தேதி வெளியாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actress Aishwarya Rajesh