முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'ஜப்பான்' படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. குஷியில் கார்த்தி ரசிகர்கள்!

'ஜப்பான்' படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. குஷியில் கார்த்தி ரசிகர்கள்!

ஜப்பான்

ஜப்பான்

நடிகர் கார்த்தி தற்போது ராஜூ முருகன் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழகத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை புனைவு திரைக்கதையின் மூலமாக படமாக்கி வருகின்றனர் என கூறப்படுகிறது. அதற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தை விநாயகர் சதுர்த்திக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.

நடிகர் கார்த்தி தற்போது ராஜூ முருகன் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழகத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை புனைவு திரைக்கதையின் மூலமாக படமாக்கி வருகின்றனர் என கூறப்படுகிறது. அதற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தூத்துக்குடி, கொடைக்கானல், கேரளா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. மேலும் ஹைதராபாத்தில் ஒரு பிரம்மாண்ட சண்டை காட்சியையும் படமாக்கினர்.

Also read... சந்திரமுகி 2 படத்தின் சூப்பர் அப்டேட்.. வெளியான புதுத்தகவல்!

இந்த நிலையில் தற்போது இறுதி கட்டப்படபிடிப்பை படக் குழுவினர் நடத்தி வருகின்றனர். இதில் கார்த்தி உடன் அனு இமானுவேல், சுனில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கார்த்தி நடிப்பில் இறுதியாக வெளியான விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளன.

இதைத் தொடர்ந்து அவருடைய நடிப்பில் வெளியாக உள்ள அடுத்த திரைப்படம் ஜப்பான் என்பதால், அதற்கு திரைத்துறையினர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் அந்த திரைப்படம் நல்ல வெற்றியை பதிவு செய்யும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Karthi, Entertainment