முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அஜித்குமாரின் தந்தை உடல் தகனம்.. நேரில் இரங்கல் தெரிவித்த திரை நட்சத்திரங்கள்..

அஜித்குமாரின் தந்தை உடல் தகனம்.. நேரில் இரங்கல் தெரிவித்த திரை நட்சத்திரங்கள்..

அஜித்குமாரின் தந்தை உடல்  தகனம்

அஜித்குமாரின் தந்தை உடல் தகனம்

நடிகர் அஜித்குமாரின் இல்லத்திற்கு இயக்குனர் ஏ.எல்.விஜய், தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், நடிகர்கள் மிர்ச்சி சிவா, பிரசன்னா உள்ளிட்ட பலர் நேரில் சந்தித்து அஜித்திற்கும், அவரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியத்தின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக இரவு 3:15 மணிக்கு காலமானார்.  இவர் பக்கவாதத்தால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு தொடர் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன.  இந்த நிலையில் அவர் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த பொழுது காலமானார். அவருடைய உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

அவரது உடலுக்கு நடிகர் அஜித்குமாரின் தம்பி அனில் குமார் இறுதிச் சடங்குகளை செய்தார்.  இதற்கு முன்பாக நடிகர் அஜித்குமாரின் இல்லத்திற்கு இயக்குனர் ஏ.எல்.விஜய், தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், நடிகர்கள் மிர்ச்சி சிவா, பிரசன்னா உள்ளிட்ட பலர் நேரில் சந்தித்து அஜித்திற்கும், அவரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினர்.

அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் அஜித் இல்லத்திற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் நடிகர் விஜய் விரைவில் அஜித்தை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.  அவர் பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்த திட்டமிட்டார்.  ஆனால் அதற்குள் இறுதி சடங்கு நடைபெற்று முடிந்துவிட்டன. இந்த நிலையில் நடிகர் அஜித் இல்லத்திற்கு விஜய் சென்று ஆறுதல் கூற உள்ளார் என கூறப்படுகிறது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actor Ajith