முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / முதன்முறையாக ரஜினிகாந்த்துடன் இணைந்த தேசிய விருது பெற்ற நடிகர்!

முதன்முறையாக ரஜினிகாந்த்துடன் இணைந்த தேசிய விருது பெற்ற நடிகர்!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் , விக்ராந்த் முதன்மை வேடத்தில் நடிக்க, நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துவருகிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

3, வை ராஜா வை படங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் , விக்ராந்த் முதன்மை வேடத்தில் நடிக்க, நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துவருகிறார். லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு செஞ்சியில் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் பிரபல நடிகர் தம்பி ராமையா இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவருக்கும் ரஜினிகாந்த்திற்கும் இடையேயான காட்சிகள் ரசிகர்களால் கொண்டாடப்படும் அளவுக்கு அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இருவருக்குமான காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.

top videos

    அடிப்படையில் இயக்குநரான தம்பி ராமையா முரளி நடித்த மனுநீதி, வடிவேலு ஹீரோவாக நடித்துள்ள இந்திரலோகத்தில் நா அழகப்பன், மணியார் குடும்பம் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். பிரபு சாலமனின் மைனா படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்துக்காக சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற பிரிவில் தேசிய விருதை தம்பி ராமையா வென்றார். தொடர்ந்து காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் கலக்கிவருகிறார் தம்பி ராமையா.

    First published:

    Tags: AR Rahman, Rajinikanth