முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரஞ்சிதமே பாடலுக்கு தனது ஸ்டைலில் நடனமாடிய விராட் கோலி? - உற்சாகத்தில் தமன் பகிர்ந்த வீடியோ

ரஞ்சிதமே பாடலுக்கு தனது ஸ்டைலில் நடனமாடிய விராட் கோலி? - உற்சாகத்தில் தமன் பகிர்ந்த வீடியோ

ராஷ்மிகா - விஜய் - விராட் கோலி

ராஷ்மிகா - விஜய் - விராட் கோலி

தமன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் ஆர்சி 15 படத்துக்கும் இசையமைத்துவருகிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் நிலையில் 90 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்த லோகேஷ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் காஷ்மீர் ஷெட்யூலில் நடிகர் சஞ்சய் தத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதனையடுத்து சென்னை ஷெட்யூலில் மீண்டும் சந்திக்கலாம் என அவரை லியோ படக்குழுவினர் வழியனுப்பி வைத்தனர்.

இதற்கு முன்னதாக விஜய் நடித்திருந்த வாரிசு படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் வெற்றிக்கு தமனின் பாடல்கள் ஒரு பெரும் காரணம். குறிப்பாக ரஞ்சிதமே பாடல் அதிரி புதிரி ஹிட்டடித்தது. பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாவில் ரீல்ஸாக பகிரத் தொடங்கினர்.

பேட்டை கையில் வைத்துக்கொண்டு தனது ஸ்டைலில் ரஞ்சிதமே பாடலுக்கு அவர் நடனமாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இதனை இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால், விராட் கோலி ஆடியது வேறு ஒரு பாடலுக்கு என்றும் ரஞ்சிதமே பாடல் எடிட் செய்து சேர்க்கப்பட்டது என்று நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பதிவிட்டுவருகின்றனர்.

தமன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் ஆர்சி 15 படத்துக்கும் இசையமைத்துவருகிறார். ஷங்கர் தான் முதன்முதலில் தமனை தனது பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தியவர். மேலும் ஷங்கர் தயாரித்த ஈரம் படத்தில் தான் தமன் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Virat Kohli