முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு... தவிர்த்திருந்திருக்கலாம் - பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது விஜய் பேசிய வீடியோ வைரல்

மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு... தவிர்த்திருந்திருக்கலாம் - பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது விஜய் பேசிய வீடியோ வைரல்

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது நடிகர் விஜய் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் குறைந்த அளவே அச்சடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. வரும் மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசு கடந்த 2016 ஆம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த போது அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பிரபலங்கள் கருத்து தெரிவித்திருந்தனர். தற்போது ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அதுகுறித்து  பேசிய பிரபலங்களின் கருத்துகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் விஜய் பணப்பிழப்பு நடவடிக்கை குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது  பேசிய அவர், ''இதனால் ஏற்படும் பாதிப்புகள் நோக்கத்தை விட அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சில விஷயங்களை தவிர்த்திருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்படுக்கிறது. பொதுமக்கள் சிலர் பசிக்கு சாப்பிட முடியாமல், மாத்திரை வாங்க முடியாமல், திரும்ப வீடு வந்து சேரமுடியாமல் அவதிப்பட்டனர். தினமும் கிடைக்கிற 500, 100 வச்சுக்கிட்டு தொழில் பண்ணுகின்ற வியாபாரிகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் ஆகியோர் தேவையில்லாமல் பாதிக்கப்படுகிறார்களோ என்கிற ஒரு சின்ன ஃபீல்.

இதையும் படிக்க | பாகுபலியை மோசமான படம் என்றனர்... சொந்த மாநிலத்திலிருந்து வந்த விமர்சனம் குறித்து பகிர்ந்த ராஜமௌலி

நிறைய விஷயங்களை பார்த்தேன். மனசுக்கு மிக கஷ்டமாக இருந்தது. ஒரு பேத்தியோட கல்யாணத்துக்கு பாட்டி தனது நிலத்தை விற்று பணம் கொண்டுவராங்க. அந்தப் பணம் செல்லாதுனு கேள்விப்பட்டதும் தற்கொலை செய்துகொள்கிற அளவுக்கு சென்றிருக்கிறார்கள். ஒரு மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தைக்கு ஒரு பிரச்னை. அதற்கு சிகிச்சை அளிக்க முடியாமல் இறந்துவிடுகிறது. இந்த மாதிரி சில விஷயங்களை தவிர்த்திருந்திருக்கலாமோ என்று தோன்றியது.

நாட்டில் 20 சதவிகிதம் பணக்காரர்கள் இருப்பாங்க. அதுல ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் பண்ற தவறுனால மீதி இருக்கிற 80 சதவிகிதம் மக்கள் பாதிக்கப்படுறாங்க. இப்படி ஒரு சட்டம் போடுறாங்க. அப்படினா அதுல என்னென்ன பிரச்னைகள் வரும் என்பதை முன் கூட்டியே தெரிந்துகொண்டு பண்ணியிருந்தா நல்லா இருந்திருக்குமோ என்பதுதான் என் தாழ்மையான கருத்து என்று பேசினார்.

First published:

Tags: Actor Thalapathy Vijay